சொற்பொருள்:
- தாது - மகரந்தம்
- போது - மலர்
- பொய்கை - குளம்
- பூகம் - கமுகம்(பாக்கு மரம்)
- பெயர் - கம்பர்
- ஊர் - நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.
- போற்றியவர் - சடையப்ப வள்ளல்
- இயற்றிய நூல்கள் - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
- காலம் - கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.
- வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றியவர் - கம்பர். அந்நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே இது வழிநூல் எனப்படுகிறது.
- கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
- ஆறு காண்டங்களைக் கொண்டது கம்பராமாயணம்.
- பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
- காண்டம் - பெரும் பிரிவு
- படலம் - உட்பிரிவு
- இப்பாடல் பால காண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.
- தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.
